ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
ராமநாதபுரம் கமுதி அருகே அபிராமம் மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 11:49 GMT
ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமத்தை சேர்ந்த மாணவர்கள் யோகா, கராத்தே, சிலம்பம் போட்டியில் சாதனை படைத்து ள்ளனர். கமுதி அருகே அபிராமத்தில் இயங்கி வரும் டிஎம் அகாடமி எனப்படும் தனியார் அகாடமியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கராத்தே, சிலம்பம், யோகா பரத நாட்டியம், உட்பட பல்வேறு கலைகள் கற்று வருகின்றனர். இந்த அகாடமியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுரையில் நடைபெற்ற சிலம்பம், கராத்தே, யோகா போட்டியில் பங்குபெற்று, அதிக பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை அகாடமி நிறுவனர் மீனலோஷினி, பயிற்சி ஆசிரியர் கலைக் குமார் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர் மேலும் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.