ராமநாதபுரம் ஆலயத் திருவிழா

ராமநாதபுரம் மண்டபம் புனித அருளானந்தர் திருத்தலத்தில் 29ம் ஆண்டு ஆலய திருவிழா கடந்த ஜன. 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-02-04 10:11 GMT

திருப்பலி நிகழ்ச்சி

ராமநாதபுரம் 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் ஆலயத்தில் திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இரவு வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் குழந்தை ஏசு, ஆரோக்கிய மாதா, புனித அருளானந்தர் பவனியாக வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.

பங்குத்தந்தை எட்வின் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இன்று காலை நிறைவு திருப்பலியும் கொடி இறக்கமும் நடந்தது. இதில் 500க்கு மேற்பட்ட இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். பங்குதலைவர் ஞானம், துணை தலைவர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News