வரதராஜபெருமாள் கோவிலில் ராம நவமி கர்ப்ப உற்சவ பெருவிழா

அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துார் வரதராஜபெருமாள் கோவிலில் ராம நவமி கர்ப்ப உற்சவ பெருவிழா நடந்தது.

Update: 2024-04-18 05:41 GMT

வரதராஜபெருமாள்

செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுபாக்கம் அடுத்த கடமலைப்புத்துாரில், பெருந்தேவி தாயார்உடனுறை வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ராம நவமி கர்ப்ப உற்சவ பெருவிழா மற்றும் 16-ம் ஆண்டு திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இன்று காலை 5:00 மணிக்கு, கோ பூஜை யுடன் தொடங்கி, மங்கலஇசை நிகழ்த்தப்பட்டது. பின், மாலை 5:00 மணிக்கு, ராமர் - -சீதாலட்சுமி பட்டாபிஷேகம், திருக்கல்யாண வைபவம் மற்றும் ஊஞ்சல் சேவையும் நடைபெறும். அதன்பின், இரவு பட்டா பிஷேக சிறப்பு அலங்காரத்துடன், பஜனை குழுவினருடன் திருவீதி உலாநடக்கிறது.
Tags:    

Similar News