ராமானுஜரின் 1007வது அவதரித்த நாள் கொண்டாட்டம்
திருக்கோஷ்டியூரில் ராமானுஜரின் 1007வது அவதரித்த நாளை மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.;
ராமானுஜர்
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1007 வது அவதரித்த நாள் கொண்டாடப்பட்டது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் மூலவர் அஷ்டாங்க விமானத்தில் ஏறி திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கற்ற மந்திரத்தை ராமானுஜர் மக்களுக்கு உபதேசித்த சிறப்பை பெற்றது. இதனால் இங்கு ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது.
இந்நிலையில் உற்ஸவ ராமானுஜர் பெருமாள் சன்னதி எழுந்தருளி மங்களாசாஸனம் நடந்தது. தொடர்ந்து தாயார், ஆண்டாள், திருக்கோஷ்டியூர் நம்பி சன்னதிகளிலும் எழுந்தருளி மங்களாசாஸனம் நடந்தது. பின்னர் ராமனுஜர் தென்னமரத்து வீதி புறப்பாடு நடந்தது. ராமானுஜர் சன்னதி எழுந்தருளி பிரபந்தம், சாத்துமுறை கோஷ்டி, தீர்த்த விநியோகம் நடந்தது. ராமானுஜர் நூற்று அந்தாதி கோஷ்டி நடந்தது. பின்னர் மங்களாசாஸனத்துடன் நிறைவு பெற்றது.