ரம்ஜான் : செஞ்சி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் நடந்த வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-04-07 01:43 GMT

ஆடுகள் விற்பனை 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. செஞ்சி மலைகள் சார்ந்த பகுதி என்பதால் இங்கு வளர்க்கப்படும் ஆடுகள் மூலிகைகளை தின்று வளர்வதால், அதன் கறி சுவையாக இருக்கும். இதனால் செஞ்சி வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகளை விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் நேரில் வந்து வாங்கி செல்வார்கள்.

குறிப்பாக தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிகமாக ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். அந்த வகையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று செஞ்சியில் நடந்த வாரச்சந்தைக்கு செஞ்சி பகுதியை சேர்ந்த கால் நடை வளர்ப்பவர்கள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பறக்கும் படையினரின் வாகன சோதனைக்கு பயந்து வெளிமாவட்ட வியாபாரிகள் பலர் வாரச்சந்தைக்கு வரவில்லை. இதனால் ஆடுகள் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. இந்த வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News