ராங்கியம் அழகிய நாச்சியம்மன் கோயில் தேரோட்டம்!
ராங்கியம் அழகிய நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது;
ராங்கியம் அழகிய நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது
திருமயம் ஒன்றியம் ராங்கியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அழகிய நாச்சியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி காப்புக்கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய் யப்பட்டு வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதும் 4.30 மணிக்கு திரும யம் ஒன்றியக்குழு தலைவர் அழ.ராமு,செயல் அலுவலர் ஜெயா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரை கிராம நாட்டார், நகரத்தார் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி வலம் வந்து 6.20 மணிக்கு நிலையை அடைந்தது. ஊராட்சி தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கலைச்செல்வி,சண்முகநாதன் பொறியி யல் கல்லுாரி முதல்வர் குழ.முத்துராமு உட்பட பலர் கலந்து கொண்டனர். பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.