ராணிப்பேட்டை துணை ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோர் அவமதிக்கும் கட்சியினை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-21 11:33 GMT

பாஜக ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் துணை ஜனாதிபதி, மக்களவை சபநாயகர் ஆகியோரை அவமதிப்பு செய்யும் கட்சிகளை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்   ராணிப்பேட்டை மாவட்ட முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று துணை ஜனாதிபதி, மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரை அவமதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபநாயகருக்கு உரிய மரியாதை அளிக்காமல் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டிய பாஜகவினர் தங்களை எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விதமாக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News