அரியவகை கருங்கொக்குகள் திண்டுக்கல் வருகை

கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே வாழும் கருங்கொக்குகள், திண்டுக்கல், வெங்கடாஸ்திரிக் கோட்டை கிராமப் பகுதியில் முகாமிட்டுள்ளன.

Update: 2024-01-10 10:24 GMT

கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே வாழும் கருங்கொக்குகள், திண்டுக்கல், வெங்கடாஸ்திரிக் கோட்டை கிராமப் பகுதியில் முகாமிட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே வாழும் கருங்கொக்குகள், திண்டுக்கல், வெங்கடாஸ்திரிக் கோட்டை கிராமப் பகுதியில் முகாமிட்டுள்ளன. அரிதினும் அரிதாகவே இந்த பறவைகள் சமவெளிகளுக்கு வரும். இதை பொதுமக்களும், விவசாயிகளும் ஆச்சரியமுடம் பார்வையிட்ட்னார். சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட பறவைகள் ஆய்வாளர் வாழைக்குமார் கூறியதாவது, 'எனது ஊரில் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்து, கடந்த 6 வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன். கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே வாழும் இந்த கருங்கொக்குகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்திருப்பது பறவைகள் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வாகும் என்றார்.
Tags:    

Similar News