ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவதி
ராசிபுரம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைகின்றனர்.
Update: 2024-05-11 15:23 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர பகுதியில் சனிக்கிழமை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. ராசிபுரம் அரசு மருத்துவமனை உள்பகுதியில் உள்ள பிரசவ வார்டு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது ஒரு மணி நேரத்திற்கு பெய்த இந்த மழையால் அரசு மருத்துவமனை பெண்கள் பிரசவ பகுதி மற்றும் புற நோயாளிகள் உள்ள பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவர்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பிரசவ வார்டு பகுதியில் புகுந்த மழை நீர் தற்போது அங்குள்ள பணியாளர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விரைவாக தண்ணீர் வெளியேற அங்குள்ள பணியாளர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அடிக்கடி இதுபோல் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகள் ,மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.