மதுரைக்கு கடத்த முயன்ற ரேசன் அரசி பறிமுதல்
மதுரைக்கு கடத்த முயன்ற ரேசன் அரசியை போலீசார் பறிமுதல் செய்தனர்;
Update: 2024-01-25 04:57 GMT
மதுரைக்கு கடத்த முயன்ற ரேசன் அரசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருவேங்கடத்தில் இருந்து மதுரைக்கு சென்ற மினிலாரியை சோதனை செய்த போது ரேசன் அரிசி மூடை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த சந்தனமாரி என்பவரை திருவேங்கடம் போலீசார் கைது செய்து 2 டன் ரேசன் அரிசியை மற்றும் மினிலாரியும் பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.