விழுப்புரத்தில் நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Update: 2024-03-14 04:16 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோபிநாத் கண்டன உரையாற்றினார். சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். ஒரு கிலோ பொருளின் விலை, மொத்த பொருளின் மதிப்பு உள் ளிட்ட ரசீது வழங்கும் வகையில் புதிய விற்பனை முனையம் வழங்க வேண்டும், ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும், பணி வரன்முறைப்படுத்தாத பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவின்படி வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும் என் பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.