அடையாளம் தெரியாத ஆண் சடலம் - காவல்துறையினர் விசாரணை
பெரம்பலூர் அரசு மருத்துவமனை எதிரே பெயர் விலாசம் தெரியாத ஆண் நபரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-23 10:48 GMT
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
பெரம்பலூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள நிழல் குடையில், டிசம்பர் 22ம் தேதி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க, பெயர், விலாசம் தெரியாத ஆண் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உயிரிழந்த நபரின் உடலை பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைத்து இவர் யார் இவரது பெயர் என்ன எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.