தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி அரசு நிலம் மீட்பு

பல்லாவரம் அருகே பரங்கிமலையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. பரங்கிமலை, பட்ரோட்டில் 2,500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-02-02 08:12 GMT

ஆக்கிரமிப்பு அகற்றம் 

பரங்கிமலை பட்ரோட்டில், 50 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தை பலர் குத்தகைக்கு எடுத்திருந்தனர். குத்தகை காலம் முடிந்த பிறகும் நிலத்தை ஒப்படைக்காமல், வணிக நோக்கில் பயன்படுத்தி வருமானம் பார்த்து வந்தனர். இதையடுத்து, இடத்தை மீட்க செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் அரசு நிலங்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை கிராமம், சர்வே எண்: 1352 பகுதியில் அரசுக்கு சொந்தமான வகைபாடு நிலத்தில், 50 சென்ட் இடம் பரங்கிமலை ராணுவ மைதானத்தின் அருகில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள இரண்டு கடைகளுக்கு, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 'சீல்' வைத்து, பொக்லைனால் இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 200 கோடி ரூபாய். இந்த வகையில், பரங்கிமலை, பட்ரோட்டில் 2,500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்."

Tags:    

Similar News