சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம்
மழை சேதத்தால் பாதிப்புக்கு உள்ளான பள்ளிபாளையம் பள்ளி விளையாட்டு மைதானம் நகராட்சி ஊழியர்கள் மூலமாக சரி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. அவ்வப்போது நகராட்சி ஊழியர்கள் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி சாலையை சமன்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி ஆடிட்டோரியம் எதிரே உள்ள விளையாட்டு மைதானம் முழுவதும் மழை நீரால் சேதமடைந்து காணப்பட்டதால் அங்கு மாணவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் காலை நேரத்தில் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்காக அந்த இடத்தில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து இது குறித்து பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத்திற்கு பள்ளியின் சார்பில் தகவல் தெரிவிக்கபட்டது. பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் உத்தரவின் பேரில் அங்கு விரைந்த நகராட்சி ஊழியர்கள் சேறும் சகதியுமாக இருந்த மைதானத்தை மண் மூலமாக மேடேற்றி சமன்படுத்தினர்.