அரசின் நலத்திட்டங்களை பெற உழவன் செயலியை பதிவு செய்யுங்க... !

அரசின் நலத்திட்டங்களை பெற உழவன் செயலியை பதிவு செய்யுங்கள் என சேத்துப்பட்டு, விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்தனர்.

Update: 2023-12-05 09:44 GMT

அரசின் நலத்திட்டங்களை பெற உழவன் செயலியை பதிவு செய்யுங்கள் என சேத்துப்பட்டு, விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

. அரசு தரும் நலத்திட்டங்களை பெற விவசாயிகள் உழவன் செயலியில்பதிவு செய்யுங்கள் என வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் கேட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.வேளாண்மை உதவி இயக்குனர் பெரணமல்லூர் கோவிந்தராஜ் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சிவகுமார் ,வேளாண்மை அலுவலர் முனியன், சேத்துப்பட்டு தாசில்தார் வெங்கிடேசன்,,ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி வேளாண்மை அலுவலர் ராஜாராம் வரவேற்றார். இக்கூட்டத்தில் தற்போது மழை பெய்துள்ளது இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் விவசாயிகளுக்கான இடுபொருள்கள், வேளாண்மை இயந்திரங்கள் ஆகியவற்றை பெறுவதற்கு அனைவரும் உழவன் செயலியில்பதிவு செய்யுங்கள் .இதனால் அரசு தரும் திட்டங்களை பெற முடியும் என வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.மேலும். பெரிய கொழப்பலூரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி பேசுகையில் எங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

தற்போது மழையால் ஆங்காங்கே ஜுரம் பரவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் எங்கள் கிராமம் தீவு போல் காட்சி அளிக்கிறது. ஒரு கிராம வளர்ச்சிக்கு போக்குவரத்து அவசியம். எங்கள் கிராமத்திற்கு வேலூரில் இருந்து சேத்துப்பட்டு -செஞ்சி செல்லும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் வருவதில்லை. அரசு பேருந்துகள் கடமைக்கு வந்து செல்கின்றன .தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் சேத்துப்பட்டு தொடக்க சாலையிலேயே இறக்கிவிட்டு செல்கின்றனர்.

இதனால் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது .இதே போல் கங்காபுரம் ,பெரிய கொழப்பலூர் சாலை மிகவும் குண்டு குழியுமாக உள்ளது .பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இக்கூட்டத்தில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News