சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க பதிவு

சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க பதிவு செய்யும் முகாம் நாகர்கோவிலில் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-06-19 10:58 GMT

சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க பதிவு செய்யும் முகாம் நாகர்கோவிலில் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.


கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கூறப்பட்டு இருப்பதாவது:-     சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 29ஆம்  தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும் விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.        சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் விபத்து இழப்பீடு வழக்குகள், உரிமையியல் வழக்குகள், உரிமையியல் மேல்முறையீட்டு வழக்குகள், செக் மோசடி வழக்குகள், விவாகரத்து தவிர்த்து குடும்ப நல வழக்குகள் மற்றும் இதரப் பொது பயன்பாடு வழக்கு போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  

    இதில் பங்கேற்க விரும்பும் வழக்காடிகளும் அல்லது அவர்களின் சார்பில் வக்கீல்களும் வருகிற 27ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் செயல்படும் மாற்றுமுறை தீர்வு மையத்தில் நடைபெறும் 'முன்கூட்டிய ஒத்துழைப்பு அமர்வில் ' கலந்துகொண்டு தங்களது விருப்பத்தினை தெரிவித்து பதிவு செய்யலாம். இல்லையெனில் தீர்வு மையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04652 291744 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்.  dlsakanyakumaril@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News