ரயில்களில் பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பஸ், ரயில்களில் பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-26 09:20 GMT
அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் பொருட்கள் கொண்டு செல்ல கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரொக்கப் பணம், கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்தகட்டமாக ரயில்களிலும் பயணியர் அதிக அளவில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றனர். பயணிகளின் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சூட்கேஸ்,
டிராலி பேக், கைப்பைகள் அனைத்தும் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.ரயில்வே துறையில் திண்டுக்கல், வடமதுரை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.