கீழ்க்கதிர்பூரில் வேருடன் பிடுங்கப்பட்ட அரச மரத்திற்கு மறுவாழ்வு
கீழ்க்கதிர்பூரில், நடவு செய்து, 40 ஆண்டு மரத்திற்கு மறுவாழ்வு அளித்தனர் தொடர்ந்து மரம் துளிர்விடுவதற்காக ஆயத்த பணியை துவக்கினர்.
காஞ்சிபுரம், கலெக்ட்ரேட் அருகில் உள்ள பல்லவன் நகர் குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 40 வயதுடைய அரச மரம் இருந்து வந்தது. மரம் இருந்த இடத்தில் குடியிருப்பு கட்டுவதற்காக அந்த இடத்தின் உரிமையாளர் மரத்தை அகற்ற தீர்மானித்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தார்.
இதை அறிந்த பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பசுமை மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் மோகன் உள்ளிட்ட பசுமை ஆர்வலர்கள், மரத்தின் உரிமையாளரிடம், மரத்தை வேருடன் எடுத்துச் சென்று மாற்று இடத்தில் நடவு செய்ய அனுமதி பெற்றனர். இதை தொடர்ந்து நேற்று காலை, பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு, ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கம், காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ், காஞ்சி அன்னசத்திரம், மகிழம், பசுமை தேடி, வடலி உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து,
ஒரு ஜே.சி.பி., மற்றும் இரண்டு கிரேன் உதவியுடன் அரச மரத்தை வேருடன் எடுத்து லாரியில் ஏற்றினர் தொடர்ந்து, பல்லவன் நகரில் இருந்து கீழ்கதிர் செல்லும் சாலையில், மின்தட பாதைக்கு பாதிப்பு ஏற்படாத வகயைில், மின்வாரிய அலுவலர்கள்,
குடியிருப்பு வாசிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வேருடன் பிடுங்கப்பட்ட அரச மரத்தை, காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்க்கதிர்பூரில், நடவு செய்து, 40 ஆண்டு மரத்திற்கு மறுவாழ்வு அளித்தனர். தொடர்ந்து மரம் துளிர்விடுவதற்காக ஆயத்த பணியை துவக்கினர்.