வேன் டிரைவர் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வேன் டிரைவர் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-03-11 10:32 GMT
சங்கரன்கோவில் அருகில் வேன் டிரைவர் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்கு புதூரை சேர்ந்தவர் முருகன் (வயது 37).வேன் டிரைவர் மர்மச்சாவு இவர், நேற்று முன்தினம் மாலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி அச்சம்பட்டி கிராமத்தில் இருந்து பக்தர்களை தனது வேனில் ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவிலுக்கு சென்றபோது, முன்னால் சென்ற ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக வேன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும். வேன் டிரைவர் முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முருகனை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மயக்கம் அடைந்த முருகன் சிறிது நேரத்தில் இறந்தார். உறவினர்கள் போராட்டம் உடனே முருகளின் உறவினர்கள் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலை யத்துக்கு திரண்டு சென்று போலீசார் தாக்கியதில்தான் அவர் இறந்ததாக கூறி சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும், முருகளின் மனைவி மீனாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவர்களது 3 குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்க வேண்டும் என்று கூறி சாலை. மறியலில் ஈடுபட்ட னர். இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத 3 போலீசார் மீது இந்திய தண்டனை சட்டம் 176 பிரிவில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் சாலைமறியலை கைவிட்டனர், முருகளின் உடல் நெல்லை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மதியம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று அந்த இடத்தில் பணியில் இருந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 போலீஸ்காரர்கள் நெல்லை யில் நேற்று மாஜிஸ்திரேட் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் முருகனின் உறவினர்கள் இன்று 3-வது நாளாக அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வரு கின்றனர்.

Tags:    

Similar News