தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு
தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றிய வெளியூர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்புகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.;
Update: 2023-12-29 03:08 GMT
நிவாரண தொகுப்பு வழங்கல்
கன மழையினால் மிகவும் பாதிப்படைந்த தூத்துக்குடி மாநகரை தூய்மைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து நகராட்சி மற்றும் மாநகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பராமல் இந்த பேரிடர் காலத்தில் சிறப்பான பணிகளை மேற்கொண்டனர். அதில் ஒரு சிலர் நேற்று தங்களின் ஊர்களுக்கு சென்றனர். அதனைத்தொடர்ந்து இன்றும் சிலர் செல்வதையொட்டி அவர்களுக்கு நிவாரண தொகுப்புகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.