பழைய கூரைகள் அகற்றம்

குமாரபாளையம் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிக்காக பழைய கூரைகள் அகற்றம்

Update: 2023-12-19 10:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கிருந்து சேலம், பழனி, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் பயணிகள் சென்று வந்தனர். பேருந்து நிலையம் கட்டபட்டு நீண்ட வருடங்களானதால் பேருந்து நிலையத்தில் மேற்கூரைகள் உடைந்து விழத் துவங்கியது. பலமுறை பராமத்து பணிகள் மேற்கொண்ட போதிலும் அவ்வப்பொழுது பழுது ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு நகர மன்றம் மூலம் கோரிக்கை அனுப்பினர். நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவின் பரிந்துரையின் பெயரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 7 கோடியே 38 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்பொழுதுள்ள புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கடைகள் அனைத்தும் வாடகை வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு மாற்றப்படுகிறது. அங்கிருந்த வாடகை வாகனங்கள் அனைத்தும் காவிரி நகர் பாலம் அருகே உள்ள காலி இடத்திற்கு மாற்றப்படுகிறது. தற்போது உள்ள பேருந்து நிலையக் கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு அம்மா உணவகம் அருகே அமைக்கப்படும். தற்காலிக வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. புதிய பேருந்து நிலையம் கட்ட கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போதுள்ள பழைய பேருந்து நிலையத்தின் கூரைகளைப் பிரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. காங்கிரட் தளங்கள் சுவர்கள் முழுமையாக அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு வாரத்தில் பழைய பேருந்து நிலையம் அப்புறப்படுத்தப்பட்டு பூமி பூஜை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
Tags:    

Similar News