சாலையோர புதர், செடிகள் அகற்றும் பணி
குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் மண்டியுள்ள புதர்களை நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அகற்றினர்.
Update: 2024-01-03 08:31 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் சாலையோரம் புதர் செடிகள் மண்டி காணப்பட்டது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சார்பில் சாலையோரம் உள்ள புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.