திண்டிவனம் -மரக்காணம் சாலையில் தேங்கிய மழை நீர் அகற்றம்

நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

Update: 2023-12-05 08:42 GMT

தேங்கிய மழை நீர்  அகற்றம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மிக்ஜாம் புயல் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 47 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது இதில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழை காரணமாக மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள சிறுவாடி கிராமத்தில் பிரதான சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. மரக்காணத்திலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் பிரதான சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது இதில் வடிநீர் வாய்க்கால்கள் அமைக்கும் பணி முழுமையாக நடைபெறாததன் காரணமாகவே சிறுவாடி கிராமத்தில் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது, இந்த மழை நீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், வணிகர்கள் என பலரும் அவதி அடைந்து வருகின்றனர்,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, மற்றும் உதவிப் பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் நெடுஞ்சாலைத்துறையினர் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மழைநீரானது வேகமாக வழிந்தோடி வருகிறது. திண்டிவனம் -மரக்காணம் சாலையில் தேங்கிய மழை நீர் அகற்றம்
Tags:    

Similar News