மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது.

Update: 2024-05-18 11:53 GMT

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் ரூ. 222 கோடியில் அமைக்கப்பட்ட இந்த பாலம் கடந்து 2018 ம் ஆண்டு நவம்பர் 12 ல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.. இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி பம்மம் பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த பாலத்தின் மையப் பகுதியில் இரண்டு மீட்டர் விட்டத்தில் சிமெண்ட் கலவை, டார் உடைந்து விழுந்தது. இதனால் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சாலையில் தூண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் இரும்பு கம்பிகள் நீண்டு வெளியே தெரிந்தது.விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லுகின்ற போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாட்டுப் பாதை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டது.இந்த நிலையில் பாலத்தில் சதி வேலை காரணமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் அங்கு நடைபெற்று வந்த பால சீரமைப்பு பணிகளையும் அவர் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து நிபுணர் குழுவினர் மேம்பாலத்தை ஆய்வு செய்து அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பாலம் சீரமைப்பு பணிகள் நிறைவடையாததால் மார்த்தாண்டத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அரசியல் கட்சியினரின் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து இன்று காலை முதல் மீண்டும் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக போக்குவரத்து துவங்கியது.இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
Tags:    

Similar News