பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Update: 2024-01-22 08:40 GMT
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள 35 சதவீத காலிப் பணியிடங்களைப் பதவி உயர்வு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய நேரடி நியமனம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடந்த 20 நிறுவனத்தில் ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ந. வேழவேந்தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு. பால்பாண்டியன், தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் தரும. கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.