மாட்டு வண்டிகளிலும் மணல் அள்ள அனுமதி கேட்டு கோரிக்கை

மயிலாடுதுறையில் மீண்டும் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-27 11:25 GMT

மயிலாடுதுறையில் மீண்டும் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் குவாரி அமைத்து டிராக்டர் மற்றும்லாரிகள் மூலம் மணல் விற்பனை செய்து வந்த நிலையில் மாட்டு வண்டிகளுக்கும் மணல் அள்ளி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2021 முதல் மாட்டு வண்டிகளுக்கு மணல் கொடுப்பதை அரசு நிறுத்திவிட்டது, இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் பல்வேறு சங்கடங்களை அனுபவித்து வருகின்றனர் தங்களது வாழ்வாதாரமே இதனால் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் மாட்டுவண்டி களுக்கு மணல் அள்ளும் உரிமை அளித்துள்ளதாகவும் அதே போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தங்களுக்கு அனுமதி வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்தனர், வரும் திங்கட்கிழமை இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாட்டுவண்டிகளுடன் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒன்று சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News