அரசு மதுபான கடையினை இட மாற்றம் செய்யக் கோரிக்கை

குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-19 14:37 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள படப்பை பகுதியை சுற்றியுள்ள பகுதியை நாட வேண்டிய நிலையில், கடந்த காலங்களில் ஆரம்பாக்கம் கிராம வெளிப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மதுபானம் கடை எண் 4096 வை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்திற்குள் இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பெண்கள் என பலர் போராட்டம் நடத்திய நிலையில் மணிமங்கலம் காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என பலர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயற்சித்த போது தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில் பொதுமக்கள் தங்களை பார்க்க ஆட்சியர் வர கோரிக்கை வைத்த நிலையில் அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து இதுகுறித்து அலுவலர் ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே ஆண்கள் நாளொன்றுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் குடிக்கும் நிலையில் தற்போது கிராமத்தில் உள்ளேயே அரசு மதுபான கடை வந்தால் எங்களின் வாழ்வாதாரம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனவே இந்த அரசு மதுபான கடையை உடனடியாக அகற்றாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் குவிந்து தான் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News