நிரந்தர மருத்துவப்படியை உயர்த்தி வழங்க கோரிக்கை

விழுப்புரத்தில் நடந்த ரெயில்வே பென்ஷனர்கள் கூட்டத்தில் நிரந்தர மருத்துவ படியை ரூ.1000-த்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-03-04 06:31 GMT

ரெயில்வே பென்ஷனர்கள் கூட்டம் 

விழுப்புரம் இந்திய தெற்கு ரயில்வே பென்ஷர்னர்கள் அசோசியே ஷன் விழுப்புரம் கிளையின் 43-வது பொது மகாசபை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாஸ்கரன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம் வரவு-செலவு கணக்கு சமர்ப்பித்தார். பென்ஷ னர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் தெற்கு ரெயில்வே பென்ஷனர்கள் சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படி நிவாரணத் தொகையை அரசு திரும்ப அளித்திட வேண்டும். ஓய்வூதியர்கள் பெறும் ஓய்வூதியத்திற்கு எந்தவித வரி பிடித்தமும் இருக்கக் கூடாது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமல்படுத்தப்படும் மத் திய ஊதிய குழு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்த வேண்டும், பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைப்படி 65 வயதிலி ருந்து கூடுதல் ஓய்வூதியம் அனுமதிக்கப்பட வேண்டும், நிரந்தர மருத்துவ படியை ரூ.1000-த்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த் தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கிளை செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News