புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கிட அமைச்சரிடம் கோரிக்கை
புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கிட அமைச்சரிடம் மாவட்டச் செயலாளர் கோரிக்கை
Update: 2024-02-16 11:56 GMT
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கரிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: - தென்காசி மாவட்ட பகுதி மக்களின்நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றிடும் வகையில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கிட வேண்டும். அதன்படி சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம், திப்பணம்பட்டி, நாட்டார் பட்டி, எல்லைப்புளி வழியாக கடையத்திற்கும், வீராணத்தில் இருந்து சோலைச்சேரி, ஊத்து மலை, மருதப்பபுரம், சண்முகநல்லூர் வழியாக சங்கரன்கோவிலுக்கும், தென்காசியில் இருந்து ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, சின்னதம்பி நாடாரூர், கடையாலுருட்டி, சேர்ந்தமங்கலம் வழியாக வீரசிகாமணிக்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.