சமையலறை கட்டிடத்தை திறக்க கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், வேளையாம்பாக்கம் அரசுப்பள்ளி சமையலறை கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-01 13:11 GMT

கட்டிடத்தை திறக்க கோரிக்கை 

திருவண்ணாமலை மாவட்டம், வேளையாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சமையலறை கட்டிடம் கட்டப்பட்டது. சமையலறை கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தற்காலிகமாக மற்றொரு இடத்தில் சமையல் கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,கட்டிடத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News