புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க கோரிக்கை!
திருப்பத்துாருக்கு பஸ் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-12 07:31 GMT
அரசு பேருந்து
அறந்தாங்கியில் இருந்து பொன்ன மராவதி வழியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாருக்கு செல்லும் வழித்தடத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, பகு தியை சேர்ந்த ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால், இந்த வழித்தடத்தில் நேரடி பஸ் போக்கு வரத்து இல்லை. கிராமமக்கள் பயனடையும் வகை யில் அறந்தாங்கியில் இருந்து கே.புதுப்பட்டி, அரி மளம், செங்கீரை, லேனாவிலக்கு, விராச்சிலை, பனையப்பட்டி, குழிபிறை, செவலுார் விலக்கு, செம்பூதி, கொப்பனாப்பட்டி, கொன்னையூர், பொன் னமராவதி, உசிலம்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர், வேலங்குடி பையூர், கண்டவராயன்பட்டி வழியாக திருப்பத்துாருக்கு பஸ் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.