மாம்பாக்கம் மேம்பாலத்தில் அமைந்துள்ள மின் விளக்குகளை சரி செய்ய கோரிக்கை

மாம்பாக்கம் மேம்பாலத்தில் அமைந்துள்ள மின் விளக்குகளை சரி செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-05-23 16:48 GMT

மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள்

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் பழுதடைந்து, சில பகுதிகளில் எரியாமல் உள்ளன.

மேலும், விபத்துகள் காரணமாக உடைந்த மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் புதிதாக அமைக்கப் படவில்லை. இதனால், இரவு நேரங்களில் போதிய அளவு வெளிச்சம் இன்றி, ரயில்வே மேம்பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 

 சேதமடைந்துள்ள மின் கம்பங்களை அகற்றி, புதிதாக கம்பங்கள் அமைக்கவும், பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்கவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News