விராலிமலை அருகே பல்லாங்குழி சாலை சீரமைக்க கோரிக்கை

விராலிமலை அருகே பல்லாங்குழி சாலை சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-05-04 15:33 GMT

சேதமடைந்த சாலை

விராலிமலை ஒன்றியம் ஆவூர் சாலையில் இருந்து ஆம்பூர்பட்டி வழியாக மதியாணைப்பட்டி செல்லும் தார்ச்சாலை 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிலையில், இப்போது பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் பள்ளிக்கு சைக்கிளில் செல் லும் மாணவ, மாணவிகள், இருசக்கரவாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள்,

அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News