குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை!

தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ;

Update: 2024-02-03 04:03 GMT

தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி புதுக்கிராமம், சங்கராபுரம் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சிறிய மழை பெய்தாலே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள், நடந்து செல்லும் முதியவர்கள் தவறி விழும் சூழ்நிலை ஏற்பட்டது.  எனவே அப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News