ரயிலடி அருகே தெருமின் விளக்கை சீரமைக்க கோரிக்கை
குறிஞ்சிப்பாடி அருகே ரயிலடி அருகே தெருமின் விளக்கை சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-23 14:05 GMT
இருளில் மூழ்கியுள்ள ரயிலடி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி பகுதியில் உள்ள மரவாடி சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது.
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் அவதி அடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.