சித்தா மருத்துவமனையை துவக்க கோரி மனு

சித்தா மருத்துவமனையை தொடங்க கோரி மனு அளித்தனர்.

Update: 2023-11-30 14:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்ட சித்தமருத்துவனை துவக்க வேண்டும். தொடர்ந்து அனைத்து வசதிகளுடன் செயல்படுத்த கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட குழு உறுப்பினர் பி.ஆஸாத், நகர் குழு செயலாளர் ஏ.அரபுமுகமது, மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரிடம் மனு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இதில் ஒரு குறையாக சித்த மருத்துவமனை இல்லாமல் உள்ளது. இந்த மாவட்ட மக்களின் நன்மை கருதி சித்த மருத்துவமனையை துவக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News