செய்துங்கநல்லூர், தாதன்குளத்தில் ரயிலை நிறுத்த கோரிக்கை

பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர், தாதன்குளத்தில் நின்று செல்ல நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Update: 2024-01-26 02:01 GMT

ரயில் 

கடந்த 17 ந்தேதி மழை வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 800 பயணிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி மக்கள் உணவு அளித்தனர். அவர்களுக்கு நன்றி சொல்ல வந்த  தென்னக ரயில்வே மேலாளரிடம் எங்கள் ஊரில்  பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள். அதை ஏற்று  வருகிற 26 ந்தேதி முதல் பாலக்காடு ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.தென்னகரயில்வே நிர்வாகம்.    

அதே போல நடைபாதையாக வந்த பயணிகளுக்கு உணவளித்து, அவர்களின் உடமைகளை தூக்கிச் சுமந்த தாதன்குளம் மக்களுக்கு, ரயில்வே  நிர்வாகம்  15 ஆயிரம்  ஊக்கத்தொகை வழங்கினார்கள். அதை பெற்றுக்கொண்ட மக்கள் கனிமொழி எம்.பி. மூலமாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் முதலமைச்சர் நிவாரண தொகைக்கு அந்த பணத்தை வழங்கி விட்டு பாலக்காடு ரயிலை தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூரில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  அதே போல் செய்துங்கநல்லூரில் பஸ்ஸில் இந்த பயணிகளை ஏற்றுவதற்கும், அங்கு வந்த பயணிகளை ஆதரித்த செய்துங்கநல்லூர் மக்கள் தங்கள் ரயில் நிலையத்திலும் பாலக்காடு ரயில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  ஆனால் தென்னக ரயில்வே தாதன்குளம், மற்றும் செய்துங்கநல்லூர் மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இந்த பகுதி மக்கள்  ரயில்வே நிர்வாகத்தினிடம் செய்துங்கநல்லூர், தாதன்குளத்தில் பாலக்காடு ரயிலை நின்று செல்ல நடவடிக்கை  எடுக்க வேண்டியுள்ளனர்.

Tags:    

Similar News