கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றிகள் மீட்பு
மேட்டூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் வனப்பகுதியில் விடுவித்தனர்..;
Update: 2024-01-19 02:32 GMT
மீட்பு பணி
மேட்டூர் அருகே கொளத்தூர் குரும்பனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ். இவரது தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த 2 காட்டுப்பன்றிகள் சுரேஷ் தோட்டத்தில் விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட சுரேஷ் மேட்டூர் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த தீயனைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறக்கி வனத்துறையினர் உதவியுடன் காட்டுப்பன்றிகளை உயிருடன் கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட 2 காட்டுப்பன்றிகளையும் வனத்துறையினர் பாலமலை வனப்பகுதியில் விடுவித்தனர்.