ரத்த காயத்துடன் கிடந்த பெரியவர் மீட்பு
ராமையன்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் ரத்த காயத்துடன் கிடந்த பெரியவர் மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Update: 2024-04-24 12:00 GMT
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தலையில் அடிபட்டு ரத்த காயத்துடன் நேற்று (ஏப்.23) இரவு பெரியவர் ஒருவர் கிடப்பதாக மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெரியவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.