மாடுகள் மீட்பு: கோசாலைக்கு அனுப்பி வைப்பு

கோவை அருகே ஆவணங்களை இன்றி எடுத்து செல்லபட்ட மாடுகள் மீட்கபட்டு கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2024-02-24 11:43 GMT

கோப்பு படம் 

கோவை ரத்தினபுரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று இரவு ஆம்னி பேருந்த்து நிலையம் அருகில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த TN14-7994 என்ற எண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.

வாகனத்தில் 23 மாடுகள் உள்ளதை கண்ட அவர் இதுகுறித்து விசாரணை செய்தபோது இறைச்சி கூடத்திற்க்கு எடுத்து செல்லபடுவதாக வாகனத்தில் இருந்த அபுத்தாகீர்,இப்ராஹிம், பைரோஸ் கூறியுள்ளனர்.

இதற்கான உரிய ஆவணங்கள் இன்றி கால்நடைகள் எடுத்து வரப்பட்டதை அறிந்து மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்ததுடன் மாடுகள் மீட்கபட்டு ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கபட்டது.இதன் பின்னர் மூவரும் ஜாமீனில் விடுவிக்கபட்டனர்.

Tags:    

Similar News