விராலிமலை அருகே கிணத்திலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு

விராலிமலை அருகே கிணத்திலிருந்து தொழிலாளி சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-29 10:15 GMT

காவல் நிலையம்

விராலிமலை அருகே கிணற்றில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸார் மீட்டனர். விராலிமலை ஒன்றியம், மருதம்பட்டியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (42). கூலித் தொழிலாளியான இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாம்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை அவருக்கு சொந்தமான வயல் பகுதிக்கு சென்றவர் 60 அடி ஆழம் கொண்ட 20 அடி நீர் நிரம்பிய கிணற்றுக்குள் கால் தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தாராம்.வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் விவசாய பணிக்கு சென்றவர்கள் கிணற்றுக்குள் தியாகராஜன் இறந்து மிதப்பதை பார்த்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் உடனடியாக அங்கு சென்று தியாகராஜன் சடலத்தை மீட்டனர்.

இதனிடையே, தகவலறிந்த அன்னவாசல் போலீசார் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்துவிசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News