ஆத்தூர் அருகே ஜெ கே நகர் பகுதியில் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி !
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட ஜெ ஜெ நகர் பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் மூச்சு திணரல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுப்பு சமூக ஆர்வலர் செம்முகில் ராஜலிங்கம் கோரிக்கை.;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 11:45 GMT
குப்பை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 6.வது வார்டு ஜெ கே நகர் பகுதியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரி சேகரிக்கும் மக்கும் குப்பை மாக்காதா குப்பைகளை சேகரித்து ஜெகே நகரில் ஒரே இடத்தில் கொட்டி வைத்து. தீயிட்டு எரிக்கப்படுவதால் அதிலிருந்து வரும் புகை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவாசிக்கவும் மூச்சு விடுவதற்கும் சிரமப்படுவதாகவும்,கண் எரிச்சல்,இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்,உள்ளதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.