செம்மண் எடுக்க எதிர்ப்பு. வாகனங்களை சிறை பிடித்து போராட்டம்.
செம்மண் எடுக்க எதிர்ப்பு. வாகனங்களை சிறை பிடித்து போராட்டம்.
By : King 24x7 Website
Update: 2023-12-27 16:54 GMT
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கருமன்கூடல், நடுவூர் கரை உள்ளிட்ட கிராமங்களில் தனியாருக்கு சொந்தமான செம்மண் மேடு உள்ளது. இது ஏழு பேருக்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. இங்கிகுந்து கோர்ட் உத்தரவுபடி கடந்த சில நாட்களாக செம்மண் எடுத்து விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மண் எடுக்க வந்த வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த குளச்சல் ஏ எஸ் பி பிரவீன் கௌதம் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கனிமவளத் துறை உதவி இயக்குனர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு, தொடர்ந்து மண் எடுப்பது என்றும் அதுவரை மண்ணெடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.