ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்த தீர்மானம்!
தச்சன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக ஆக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தச்சன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக ஆக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.கந்தர்வகோட்டையில் நடைபெற்ற கட்சியின் ஒன்றிய குழுக் கூட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். கலியபெருமாள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்டச் செயலர் த. செங்கோடன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கந்தர்வகோட்டை ஊராட்சி பகுதிகளில் அடிக்கடி வீடு புகுந்து மர்ம நபர்கள் திருடுவதால் போலீஸார் ரோந்தைதீவிரப்படுத்த வேண்டும், கந்தர்வகோட்டை தாலுகா தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முழுச் சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புவதைக் கைவிட வேண்டும். நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மனிதநேயத்தோடு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, கந்தர்வகோட்டை முதல் கறம்பக்குடிக்கு இயங்கி வந்து நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்தை வழக்கம்போல இரவு 10.30 மணிக்கு இயங்கச் செய் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலர் சாமிக்கண்ணு, மாவட்ட குழு உறுப்பினர் அம்பலராஜ், நகரச் செயலர் நாகராஜ், பெருமாள், மாதர் அணி குழு உறுப்பினர் விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.