சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் வளத்தோட்டத்தினர் வலியுறுத்தல்

வளத்தோட்டம் சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.

Update: 2024-06-16 14:13 GMT

சுவர் அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் ஒன்றியம், வளத்தோட்டம் கிராமத்தில் இருந்து, துாசி கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் கால்வாயின் மீது, சிறுபாலம் கட்டப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, வளத்தோட்டம் கிராமம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்வோர் இந்த வழியாக சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.

தெரு மின்விளக்கு இல்லாத அப்பகுதியில் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News