விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற வனக்காப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற வனக்காப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கருவூல அலுவலக வளாகத்தில் ஓய்வுபெற்ற வனக்காப்பாளர்கள், வனக்காவ லர்கள் மிகை பணியிட காவலர்கள் நலச்சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார்.
இதில் செயலாளர் சின்ன சாமி, பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் ராஜேந்திரன், லூர்துசாமி, கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கொளஞ்சியப்பன், வெங்கடேசன், அண்ணாத் துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், வனக்காப்பாளர்கள், வனக்காவ லர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டபோதிலும் 1995-ம் ஆண்டில் வனக்காவலராக பின்னவர்களுக்கு வழங்கியதை குறிப்பிட்டு நீதிமன்றம் மூலம் சீனியாரிட்டி பெற்று பணிஓய்வு பெற்று பென்ஷன் பெறுவதில்,
குளறுபடிகள் உள்ளதை சரிசெய்ய வேண்டும், காசில்லா மருத்துவம் பெறுவதை அரசு உறுதிப் படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.