பண பலன்களை பெற்றுத்தர கோரிக்கை

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பண பலன்களை பெற்றுத்தர கோரிக்கை வைத்தனர்.

Update: 2024-05-26 14:25 GMT
எம்எல்ஏ

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கத்தினர் கிள்ளியூரில் தமிழ்நாடு சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வை ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் உள்ள னர். இவர்களுக்கு கடந்த 18 மாதங்களாக பண பலன்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. அதுபோல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரையிலான அகவிலைப்படி உயர்வு இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இவர்களில் ஓய்வு பெற்ற வுடன் பென்சனில் 5 சதவீதம் அகவிலைப்படி மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே இந்த கோரிக்கைகளை சட்டசபை யில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று அவற்றை நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் சங்கத்தின் குமரி மாவட்டத் தலைவர் பிரான் சிஸ் செல்வராஜ், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஜோசப் கில்பட் ராஜன், தணிக்கை குழு உறுப்பினர் புஷ்ப ராஜ்,செயற்குழு உறுப்பினர் ஓலக்கோடு ஜாண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News