திருப்பூரில் வருவாய் துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-13 09:57 GMT

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் , சான்றிதழ் வழியங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும் , 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டினை செய்ய வேண்டும் ,  அதீத பணிநெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து சிட்டப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் , மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News