வருவாய் கிராம ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

வருவாய் கிராம ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில ஈடுபட்டனர்.

Update: 2023-12-08 10:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து மாநில தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்... சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டமானது வட்டார தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்,கிராம உதவியாளர்களுக்கு போனஸ் நாள் கணக்கில் அறிவிக்க வேண்டும்,கிராம உதவியாளர்களுக்கு ஜமாபந்தி படி வழங்கிட வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Iஇதில் வட்டத் துணைத் தலைவர் கவிதா,வட்டச் செயலாளர் ராஜா மற்றும் வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

Tags:    

Similar News