வழக்கில் சிக்கிய வாகனங்களால் விபத்து அபாயம்
Update: 2023-11-01 06:32 GMT
வழக்கில் சிக்கிய வாகனங்கள்
ஸ்ரீபெரும்புதுாரில் வழக்கில் சிக்கிய வாகனங்கள் நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைப்பதால், விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சென்னை- - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் ஸ்ரீபெரும்புதுார் அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலைய எல்லையில், சாலை விபத்து, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய வாகனங்கள், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையம் எதிரே மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியே செல்லும் மற்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வழக்கில் சிக்கிய வாகனங்களை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.